கியாஸ் டேங்கர் லாரி விபத்தில் சிக்கினால் பாதுகாப்பாக மீட்பது குறித்து ஒத்திகை


கியாஸ் டேங்கர் லாரி விபத்தில் சிக்கினால் பாதுகாப்பாக மீட்பது குறித்து ஒத்திகை
x
தினத்தந்தி 8 May 2022 1:02 AM IST (Updated: 8 May 2022 1:02 AM IST)
t-max-icont-min-icon

கியாஸ் டேங்கர் லாரி விபத்தில் சிக்கினால் பாதுகாப்பாக மீட்பது குறித்து ஒத்திகை

திருச்சி, மே.8-
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இனாம்குளத்தூரில் இயங்கிவரும் இந்தியன் ஆயில் நிறுவனம், திருச்சி தீயணைப்பு நிலையம் இணைந்து திரவநிலையில் கியாஸ் ஏற்றி வரும் டேங்கர் லாரி விபத்து ஏற்பட்டாலோ அல்லது பழுது ஏற்பட்டாலோ அந்த டேங்கர் லாரியில் உள்ள திரவ வடிவிலான கியாசை பாதுகாப்பாக வேறொரு வாகனத்திற்கு மாற்றுவது எப்படி? என்பது குறித்த பயிற்சி மற்றும் ஒத்திகை நடந்தது. கலெக்டர் எஸ்.சிவராசு முன்னிலை வகித்தார். இதில் ரூ.1 கோடியே 16 லட்சம் மதிப்பிலான ‘புல்லட் டிரக்’ என்று சொல்லக்கூடிய அவசரகால மீட்பு வாகனம் மூலம் திரவ வடிவிலான கியாசை மாற்றுவது, விபத்தில் சிக்கியவர்களை தீயணைப்பு படை வீரர்கள் மூலம் மீட்டு ஸ்டெச்சரில் கொண்டு செல்வது, திரவ வடிவிலான கியாஸ் டேங்கரை தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விப்பது எப்படி என்றும், விபத்தில் சிக்கும்போது எழும் புகையில் சிக்கியவர்களை பாதுகாப்பான முககவசம் அணிந்து சென்று தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருவதுபோன்றும் ஒத்திகை நடத்தப்பட்டது. தீயணைப்புத்துறையில் மாவட்ட உதவி அலுவலர் கருணாகரன், தீயணைப்பு நிலைய அலுவலர் மெல்கியூராஜா, இந்தியன் ஆயில் நிறுவன பாதுகாப்பு அதிகாரி ரவி உள்ளிட்டவர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், மாவட்ட தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரக அலுவலர்கள், விமான நிலைய அலுவலர்கள், துப்பாக்கி தொழிற்சாலை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story