நாட்டு மருந்து கிட்டங்கியில் திடீர் தீ


நாட்டு மருந்து கிட்டங்கியில் திடீர் தீ
x
தினத்தந்தி 8 May 2022 1:02 AM IST (Updated: 8 May 2022 1:02 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே நாட்டு மருந்து கிட்டங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகர்,
விருதுநகர்-சிவகாசி ரோட்டில் மாதவன் (வயது23)  என்பவருக்கு சொந்தமான நாட்டு மருந்து கிட்டங்கி உள்ளது. நேற்று காலை திடீரென கிட்டங்கியில் இருந்து புகை வெளிவந்த நிலையில் இதுபற்றி அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் மாவட்ட தீயணைப்பு உதவி அதிகாரி மணிகண்டன், நிலைய அதிகாரி கண்ணன் ஆகியோர் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்குள் நாட்டு மருந்து கிட்டங்கியில் உள்ள காய்ந்த மூலிகை செடிகள் தீப்பற்றியது. தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி இந்நகர் பஜார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Related Tags :
Next Story