138 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல்


138 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல்
x
தினத்தந்தி 8 May 2022 1:13 AM IST (Updated: 8 May 2022 1:13 AM IST)
t-max-icont-min-icon

138 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல்

திருச்சி, மே.8-
திருச்சி மாவட்டத்தில் உள்ள கோழி இறைச்சிக்கடை, ஷவர்மா விற்பனை செய்யும் இடங்களில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று 2-வது நாளாக திருச்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தினர். திருச்சி மத்திய பஸ் நிலையம், தில்லை நகர், தென்னூர், மணப்பாறை, முசிறி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஓட்டல்களில் நடத்திய சோதனையில் கெட்டுப்போன இறைச்சிகள் வினியோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 47 கடைகளில் 138 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சியை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இதை விற்பனைக்காக வைத்திருந்த 5 கடைகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி எச்சரித்தனர். மேலும் 4 கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இது போல விற்பனை செய்தால் கடை களுக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரி வித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், அசைவ உணவகங்கள், ஓட்டல்கள் நடத்தும் உரிமையாளர்கள் முதலில் பொதுமக்களுக்கு தரமான பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும். இல்லையென்றால் ஓட்டல்களில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு தர மில்லாத பொருட்கள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story