செங்கோட்டை அருகே 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்


செங்கோட்டை அருகே 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 8 May 2022 1:17 AM IST (Updated: 8 May 2022 1:17 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே 1 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள வல்லம், பிரானூர் பார்டர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாங்காய் குடோன்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பிரானூர் பார்டரில் உள்ள ஒரு குடோனில் ரசாயன கல் பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைத்ததும், அவை எளிதில் கெடாமல் இருப்பதற்காக ரசாயன ஸ்பிரே அடித்து இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள், சுமார் ஒரு டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து அவற்றை மண்ணில் குழிதோண்டி புதைத்து அழித்தனர். 

Next Story