இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது


இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 May 2022 1:39 AM IST (Updated: 8 May 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர், 
விருதுநகர் சிவந்தியபுரம் ஆத்து மேட்டு பகுதியை சேர்ந்தவர் சிவசங்கரி (வயது 29). இவர் விருதுநகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்த போது அதே நிறுவனத்தில் வேலைபார்த்த இந்நகர் ஆனைக்குழாய் தெருவை சேர்ந்த சுந்தரம் (32) என்பவருடன் கடந்த 2015-ம் ஆண்டு முதல் பழகி வந்துள்ளார். சுந்தரம், சிவசங்கரியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிவசங்கரியுடன் நெருக்கமாக இருந்து வந்த நிலையில் சிவசங்கரி கர்ப்பமடைந்தார். இதனைத் தொடர்ந்து சிவசங்கரி, சுந்தரத்திடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். இந்நிலையில் சுந்தரம் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சிவசங்கரி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் கர்ப்பத்தை கலைக்க சிவசங்கரிக்கு சில மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளார். இதனால் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்ட சிவசங்கரி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். மேலும் சுந்தரத்திற்கு வேறொரு பெண்ணுடன் திருமணமானது தெரியவந்த நிலையில் சிவசங்கரி, சுந்தரம் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சுந்தரத்தின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

Next Story