ஆசிரியை உள்பட 2 பேரின் வீடுகளில் நகைகள் திருட்டு


ஆசிரியை உள்பட 2 பேரின் வீடுகளில் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 8 May 2022 1:40 AM IST (Updated: 8 May 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியை உள்பட 2 பேரின் வீடுகளில் நகைகள் திருட்டு

கே.கே.நகர், மே.8-
திருச்சி, கே.கே.நகர், அய்யப்பன் நகாில் உள்ள நேரு தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவா் திருச்சி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவா் ஆவார். இவர் கடந்த 5-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்தார். பின்னர் நேற்று வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.7 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதேபோல் திருச்சி, கே.கே. நகர், அழகிரி தெருவை சேர்ந்தவர் பிரபாவதி. இவர் திருச்சி அருகில் உள்ள தனியார் பள்ளியில்ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு சென்ற அவர் மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 1½ பவுன் நகை திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து 2 பேரும் கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story