நிலத்தை அளக்க விடாமல் விவசாய குடும்பத்தினர் போராட்டம்


நிலத்தை அளக்க விடாமல் விவசாய குடும்பத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 8 May 2022 1:49 AM IST (Updated: 8 May 2022 1:49 AM IST)
t-max-icont-min-icon

நிலத்தை அளக்க விடாமல் விவசாய குடும்பத்தினர் போராட்டம்

மணப்பாறை, மே.8-
மணப்பாறையை அடுத்த கரும்புளிப்பட்டியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். விவசாயி. இவர் கடந்த 2006-ம் ஆண்டு குளித்தலையில் உள்ள வங்கியில் டிராக்டர் வாங்க ரூ.12 லட்சம் கடன் வாங்கிய நிலையில், அதற்கான தொகையை முழுமையாக செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் வங்கி நிர்வாகம் பன்னீர் செல்வத்தின் 11½ ஏக்கர் நிலத்தை ரூ.58 லட்சத்துக்கு ஏலம் விட்டது. மேலும் வங்கி நிர்வாகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வங்கி உத்தரவின் பேரில் வங்கி ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், வருவாய்துறை, போலீசார், நில அளவைத் துறை உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட நிலத்தை அளக்கச் சென்றனர். அப்போது அங்கிருந்த பன்னீர் செல்வம் குடும்பத்தினர் மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தங்களுக்கு கால அவகாசம் வழங்கிட வேண்டும் என்றும், நீதிமன்றம் மூலம் தீர்வு கண்டுகொள்கிறோம் என்று கூறியும், அளக்கக்கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 8 பேருக்கு சொந்தமான மொத்த இடத்தையும் எப்படி எடுக்க முடியும் என்று கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி எழுதி வாங்கிக் கொண்டு புறப்பட்டனர்.

Next Story