தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 8 May 2022 1:52 AM IST (Updated: 8 May 2022 1:52 AM IST)
t-max-icont-min-icon

தஞ்ை்ச மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

வேகத்தடை வேண்டும்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மெயின்ரோடு வண்டிப்பேட்டை சாலையில் வாகனங்கள் மிகவும் வேகமாக செல்கின்றன. இதனால் பொதுமக்கள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் சாலையை கடப்பதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த சாலையில் பொதுமக்கள் நலன் கருதி வேகத்தடை அமைக்க வேண்டும்.
-பொதுமக்கள், வண்டிப்பேட்டை.
தொற்று நோய் பரவும் அபாயம் 
தஞ்சை மாவட்டம் பாபநாசம் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் துர் நாற்றத்தால் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குப்பைகளை அகற்றி, தொற்றுநோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சச்சிதானந்தம், பாபநாசம்.
சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?
தஞ்சை பூக்காரத்தெரு 20 கண் பாலம் அருகே கல்லணை கால்வாய் மேல்கரையில் சாலை அமைப்பதற்காக ஜல்லிகற்கள் கொட்டப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் நடைபெறவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் பொதுமக்கள் ஆற்றில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், தஞ்சாவூர்.

Next Story