நெல்லை மாநகராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா மேயர், துணை மேயர் தொடங்கி வைத்தனர்


நெல்லை மாநகராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா மேயர், துணை மேயர் தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 8 May 2022 1:59 AM IST (Updated: 8 May 2022 1:59 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

நெல்லை:

மரக்கன்று நடும் விழா
தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவி ஏற்று ஓராண்டு சாதனையை சிறப்பிக்கும் வகையில் நெல்லை மாநகராட்சி 4 மண்டல பகுதிகளிலும் 1,000 மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் தொடக்க விழா பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை அருகில் உள்ள சாலை போக்குவரத்து பூங்காவில் நேற்று நடைபெற்றது.
மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு பணியை தொடங்கி வைத்தனர். மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார்.
இதுகுறித்து மேயர் பி.எம்.சரவணன் கூறியதாவது:-

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு
நெல்லை மாநகராட்சியில் ரூ.5.11 கோடியில் அறிவியல் பூங்கா, ரூ.5.60 கோடியில் அறிவு சார் மையம், ரூ.4.05 கோடியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான வாகனங்கள் கொள்முதல் செய்தல் உள்பட ரூ.110 கோடிக்கு பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தி சாதனை படைத்துள்ளது.
4 மண்டலங்களிலும் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய ஏதுவாக 18 இடங்களில் ரூ.27 லட்சம் செலவில் உடற்பயிற்சி கருவிகள் நிறுவும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.
நெல்லை மாநகாரட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரியநாயகிபுரம்    கூட்டு குடிநீர்    திட்டப்பணிகள் 95 சதவீதம்    முடிந்து         விட்டது. நெல்லை மற்றும் மேலப்பாளையம் மண்டலங்களில் வருகிற 15-ந் தேதிக்குள் இந்த பணிகள் முடிந்து விடும். எனவே விரைவில் இந்த திட்டத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் வில்சன் மணித்துரை, சீதா பாலன், மாநகராட்சி பொறியாளர் நாராயணன், உதவி ஆணையாளர் ஜகாங்ஹீர் பாஷா, உதவி செயற்பொறியாளர் சாந்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story