மாணவர் தற்கொலை முயற்சி வழக்கு; 3 பேர் கைது


மாணவர் தற்கொலை முயற்சி வழக்கு; 3 பேர் கைது
x
தினத்தந்தி 8 May 2022 2:12 AM IST (Updated: 8 May 2022 2:12 AM IST)
t-max-icont-min-icon

மாணவர் தற்கொலை முயற்சி வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேட்டை:
நெல்லையை அடுத்த சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவர், நெல்லை தனியார் கண் மருத்துவமனையில் செயல்படும் கல்வி மையத்தில் கண் சிகிச்சைக்கான டிப்ளமோ படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த ஒரு மாதமாக வகுப்புக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதற்காக மாணவரை கல்விமைய பயிற்சியாளர்கள் கண்டித்தனர்.

இதனால் மனமுடைந்த மாணவர் சம்பவத்தன்று தனது வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் படுகாயமடைந்த மாணவரை பாளையங்கோட்ைட ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மாணவரை தற்கொலை முயற்சிக்கு தூண்டியதாக, கல்விமைய பயிற்சியாளர்கள் மோகனம்மாள், மாலையம்மாள், கிறிஸ்டோபர் ஆகிய 3 பேர் மீது சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Article-Inline-AD


Next Story