குடியாத்தத்தில் கருப்புலீஸ்வரர், கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி தேரோட்ட பாதையை உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்.
குடியாத்தத்தில் கருப்புலீஸ்வரர், கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி தேரோட்ட பாதையை உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்.
குடியாத்தம்
குடியாத்தத்தில் கருப்புலீஸ்வரர், கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி தேரோட்ட பாதையை உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்.
தேரோட்டம்
குடியாத்தம் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் தேர் வேலூர் மாவட்டத்திலேயே மிக உயரமான தேர் ஆகும். 43 அடி உயரம் கொண்ட இந்த தேர் திருவிழா வரும் 11-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
அதேபோல் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவை முன்னிட்டு 14-ந்தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளது இந்த இரண்டு தேர்கள் செல்லும் பாதைகளை கலெக்டரின் உத்தரவின்பேரில் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் ஆய்வு செய்தார். அவருடன் தாசில்தார் லலிதா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி, தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் கவிதா, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கீர்த்தனா, போலீசார், தீயணைப்பு படையினர் உள்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தேர் செல்லும் பாதைகளை நடந்து சென்று ஆய்வு செய்தனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
அந்த ஆய்வின் போது சாலையில் ஆங்காங்கே சிறுசிறு பழுதான இடங்களை உடனடியாக சீர் செய்யவேண்டும், தேர் செல்லும் பாதைகளில் உள்ள மரங்களின் கிளைகளை தேவையான அளவு வெட்டி அப்புறப்படுத்த வேண்டும், சாலையின் குறுக்கே செல்லும் மின் வயர்கள் குறித்தும் தேர் செல்லும் சமயத்தில் மின்வினியோகத்தை நிறுத்தி விட்டு அப்புறப்படுத்தவேண்டும், தேர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உதவி கலெக்டர் தனஞ்செயன் அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story