காதலனுடன் ஓடிய கல்லூரி மாணவியை மீட்டு தரக்கோரி தாய் தற்கொலை முயற்சி


காதலனுடன் ஓடிய கல்லூரி மாணவியை மீட்டு தரக்கோரி தாய் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 8 May 2022 2:50 AM IST (Updated: 8 May 2022 2:50 AM IST)
t-max-icont-min-icon

காதலனுடன் ஓடிய கல்லூரி மாணவியை மீட்டு தரக்கோரி மாணவியின் தாய் ஹாசன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹாசன்: காதலனுடன் ஓடிய கல்லூரி மாணவியை மீட்டு தரக்கோரி மாணவியின் தாய் ஹாசன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதலுடன் ஓட்டம் 

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா மாரேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவி. இவர் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு பவன் என்ற வாலிபருடன் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த தாய், மகள் தன்னிடம் திரும்பி வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் அவர் வரவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் சென்னராயப்பட்டணா நகர போலீசில் பெண்ணின் தாய் புகார் அளித்தார். 

ஆனால் போலீசார் இந்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த பெண்ணின் தாய் நேற்று ஹாசன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு விஷ பாட்டிலுடன் சென்று போராடினார். 

தற்கொலை முயற்சி

அப்போது அவர் கையில் இருந்த விஷத்தை குடிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு விசாரித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-

நான் ஆஷா ஊழியராக வேலை பார்த்து வருகிறேன். இந்த வேலை பார்த்துதான் மகளை படிக்க வைத்தேன். இந்த நிலையில் பவன் என்ற வாலிபர் மகளை காதல் என்ற பெயரில் கடத்தி சென்றுவிட்டார். எனது மகளை போலீசார் மீட்டு தரவேண்டும். இல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பின்னர் அந்த பெண் அங்கிருந்து சென்றார். 

Next Story