வளர்ப்பு நாயை அடித்துக் கொன்று பெண்ணுக்கு கொலை மிரட்டல்
வளர்ப்பு நாயை அடித்துக் கொன்று பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அஞ்சுகிராமம்:
அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் சவேரியார் நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ஜெயபெமிலா (வயது 43). இவர் கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கும் அருகில் வசித்து வரும் ஆன்றோ பிரவீன் (28) குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஆன்றோ பிரவீன் அவருடைய தாயார் சகாய மஞ்சுளா மற்றும் உறவினர்கள் தவசீலி, ஜென்சி ஆகிய 4 பேரும் சேர்ந்து ஆரோக்கிய ஜெயபெமிலாவின் வீட்டுக்கு சென்று அவருடன் தகராறு செய்தனர். அப்போது, அவர் செல்லமாக வளர்த்த நாயை அடித்து கொன்று விட்டு ஆரோக்கிய ஜெயபெமிலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆரோக்கிய ஜெயபெமிலா குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத்தை நேரில் சந்தித்து புகார் அளித்தார். இதையடுத்து சூப்பிரண்டு உத்தரவின்பேரில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அழகப்பபுரம் கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ைவத்தனர். இந்தநிலையில் இதுதொடர்பாக ஆன்றோ பிரவீனை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story