குமரியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்
குமரியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்ற தடுப்பு குறித்த மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் தலைமை தாங்கினார். இதில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி டாக்டர்கள், அரசு குற்றவியல் வக்கீல்கள், குழந்தைகள் நல அலுவலர், சுகாதாரத்துறை ஊழியர்கள், வட்டார போக்குவரத்து ஆய்வாளர், மின்சாரத்துறை பொறியாளர் மற்றும் அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றி பல்வேறு திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து திருட்டு பொருட்களை மீட்ட தனிப்படையினருக்கு வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வழங்கினார். மேலும் செயின் பறிப்பு வழக்குகளில் குற்றவாளிகளை பிடித்து திருட்டு பொருட்களை மீட்ட தனிப்படையினருக்கும், புலன் விசாரணையில் இருக்கும் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளை விரைந்து முடித்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு உதவிப்புரிந்த ஊழியர்களுக்கும், கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்களை விற்ற குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினர் மற்றும் போலீசாருக்கும் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story