தாரமங்கலம் அருகே குட்டையில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் பலி
தாரமங்கலம் அருகே குட்டையில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் பலியானான்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே கருக்கல்வாடி கிராமம் கோட்டைமேட்டில் உள்ள ஒரு குட்டையில் சிறுவனின் உடல் மிதப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பொதுமக்களின் உதவியுடன் சிறுவனின் சடலத்தை மீட்டனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுவன் இடங்கணசாலை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் மகன் கார்த்தி (வயது 14) என்பதும், அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story