பெருந்துறை மருத்துவ கல்லூரியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும்- சட்டசபையில் சி.கே.சரஸ்வதி எம்.எல்.ஏ. பேச்சு
பெருந்துறை மருத்துவ கல்லூரியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று சட்டசபையில் சி.கே.சரஸ்வதி எம்.எல்.ஏ. பேசினார்.
சென்னை
பெருந்துறை மருத்துவ கல்லூரியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று சட்டசபையில் சி.கே.சரஸ்வதி எம்.எல்.ஏ. பேசினார்.
செயல் அலுவலர் அலுவலகம்
மொடக்குறிச்சி சி.கே.சரஸ்வதி எம்.எல்.ஏ. சட்டசபையில் பேசியதாவது:-
அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில் பணியாளர்களுக்கு ஆலய ஆன்மிக சேவை பயிற்சி வழங்க வேண்டும். பல கோவில்களில் செயல் அலுவலர் அலுவலகங்கள் கோவில் வளாகத்திற்கு உள்ளே உள்ளன. பல செயல் அலுவலர்கள் காலணிகளை அணிந்து கொண்டு உள்ளே வருவதும், அசைவ உணவு உண்பதும் நடக்கிறது. இதற்கு தீர்வாக செயல் அலுவலர் அலுவலகங்களை கோவிலுக்கு வெளியே இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியமாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு 2 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவில் 400 சதுர அடியில் அமைந்து உள்ளதால், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவைக்கு தீர்வு காண தென்புறத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க வேண்டும். கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயணபெருமாள் கோவிலை புனரமைத்து நித்ய கால பூஜைகள், இசைப்பள்ளிகள் மூலம் சிறுவர்களுக்கு பயிற்சி வழங்க ஆவன செய்ய வேண்டும்.
புற்றுநோய் சிகிச்சை மையம்
கொடுமுடி பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும். ஊஞ்சலூர் அருகே அமைந்துள்ள நாகேஸ்வரர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சோலாரில் கல்வி கட்டண சலுகை பெறும் வகையில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க அரசு இடம் ஒதுக்கி தர வேண்டும்.
பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புற்றுநோய் சிகிச்சை மையம் ஏற்படுத்த வேண்டும். ஈரோட்டில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க வேண்டும். ஈரோட்டில் 80 அடி திட்ட சாலை தொடர்பான வழக்கை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மொடக்குறிச்சி தொகுதியில் பட்டா தொடர்பான பிரச்சினைக்கு சிறப்புமுகாம் அமைக்க வேண்டும். அனுமன்நதி, குரங்கன்பள்ளம் ஓடையினை தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும். தென்னை மற்றும் அதன் விளை பொருட்கள் சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும். சாவடிபாளையம், பஞ்சலங்கபுரம் ஆகிய இடங்களில் ரெயில்வே மேம்பால நுழைவில் கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. இந்த சாலையின் நேர்பாட்டினை மாற்றி அமைத்து தர அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story