தமிழக அரசின் ஓராண்டு நிறைவு விழா தர்மபுரியில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தமிழக அரசின் ஓராண்டு நிறைவு விழா: தர்மபுரியில் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தர்மபுரி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த ஒரு ஆண்டில் தமிழக அரசு நிறைவேற்றி உள்ள பல்வேறு திட்டங்களை எடுத்துக்கூறி தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதன்படி தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழக அரசின் ஓராண்டு நிறைவு விழா தர்மபுரி 4 ரோட்டில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர் முன்னிலை வகித்தார். நகர பொறுப்பாளர் அன்பழகன் வரவேற்றார். விழாவையொட்டி அண்ணா சிலைக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். . இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாட்டான்மாது, தங்கமணி, சந்திரமோகன், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் முல்லைவேந்தன், சுருளிராஜன், கனகராஜ், அன்பழகன், ராஜா, ரஜினிரவி, சார்பு அணி மாவட்ட பொறுப்பாளர்கள் ரவி, ராஜா, பொன் மகேஸ்வரன், குமார், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சண்முகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story