அனுமதிக்கு புறம்பாக கட்டுமானம்; 66 கட்டிடங்களை சீல் வைக்க ‘நோட்டீஸ்' - பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கை
பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிட அனுமதிக்கு புறம்பாக கட்டப்படும் கட்டிடங்கள் மற்றும் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்கள் மீது தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கள ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுமானம் நடைபெறும் இடங்களில் சம்பந்தப்பட்ட கட்டிடம் மாநகராட்சியின் அனுமதி பெற்று கட்டப்படுகிறது என்பதை உறுதி செய்யும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க கட்டிட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. கடந்த 15 நாட்களில் மாநகராட்சி அலுவலர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் அனுமதிக்கு புறம்பாக கட்டுமான பணிகளை மேற்கொண்ட 467 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 66 கட்டிடங்களை பூட்டி சீல் வைக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story