திருநின்றவூரில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை தாக்கியவர் கைது


திருநின்றவூரில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 8 May 2022 4:27 PM IST (Updated: 8 May 2022 4:27 PM IST)
t-max-icont-min-icon

திருநின்றவூரில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி, 

ஆவடியை அடுத்த திருநின்றவூர் நடுகுத்தகை நாச்சியார் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 30). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு திருநின்றவூரில் சி.டி.எச். சாலையோரம் அமைந்துள்ள மதுக்கடைக்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்திவிட்டு அங்கிருந்த டாஸ்மார்க் மேற்பார்வையாளரான திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் வெங்கத்தூர் பகுதியை சேர்ந்த ரகுபதி (வயது 55) என்பவரிடம் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் சங்கர் தான் வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து ரகுபதியை நோக்கி வீசியுள்ளார். அப்பொழுது மதுபாட்டில் அங்கிருந்த இரும்பு கம்பியில் பட்டு பாட்டிலின் துண்டு சிதறி ரகுபதியின் இடது கையில் பட்டு காயம் ஏற்பட்டது.

இது பற்றி அவர் திருநின்றவூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story