திருவள்ளூரில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு புத்துணர்வு முகாம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
ரேஷன் கடை ஊழியர்களுக்கான புத்துணர்வு முகாமை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட எடப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று கூட்டுறவு துறை சார்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு புத்துணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சரின் அறிவுரையின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1,112 ரேஷன் கடைகளை சார்ந்த 650-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் உள்ள ரேஷன் கடைகள் மற்ற மாவட்டங்களுக்கு முன்மாதிரியான இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து விற்பனை பணியை திறம்பட மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
இந்த பயிற்சி கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, துணை பதிவாளர்கள், கூட்டுறவு சார் பதிவாளர்கள் மற்றும் கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் விஜய் சரவணன், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story