1300 டன் ரேஷன் அரிசி ரெயிலில் வருகை
ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு 1300 டன் ரேஷன் அரிசி ரெயிலில் வருகை
திருவண்ணாமலை
தமிழகத்துக்கு தேவையான ரேஷன் அரிசி தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்துக்கான ரேஷன் அரிசி ஒதுக்கீடு பெரும்பாலும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 1,300 டன் புழுங்கல் ரேஷன் அரிசி மூட்டைகள் திருவண்ணாமலைக்கு ரெயில் மூலம் வந்தன.
அதை, லாரிகளில் ஏற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டதாக வழங்கல் துணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story