விவசாய நிலத்தில் டிராக்டர் ஓட்டி உழவு செய்த கலெக்டர்
திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா டிராக்டர் ஓட்டி உழவு செய்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா டிராக்டர் ஓட்டி உழவு செய்தார்.
மானிய விலையில் டிராக்டர்
தமிழக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழக அரசின் சாதனைகளை விளக்கி திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், முதன்மைச் செயலாளருமான தென்காசி ஜவகர் புதிதாக கட்டப்பட்டு வரும் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வளர்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காராமணி, உளுந்து பயிர்களை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் சென்று பார்வையிட்டு இயற்கை முறையில் நடப்படும் பயிர்களுக்கு என்ன விலை கிடைக்கிறது, சந்தை நிலவரம் என்ன என்பகு உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். பின்னர் சிறு குறு விவசாயிகளுக்கு பயரு வகைகள் பயிர்களை உற்பத்தி செய்ய நிலத்தை டிராக்டருடன் சுழல் கலப்பையை மானிய விலையில் 51 விவசாயிகளுக்கு ரூ15 லட்சத்தில் வழங்கினார்.
டிராக்டர் ஓட்டினார்
அப்போது கலெக்டர் அமர்குஷ்வாஹா, நிலத்தில் டிராக்டர் ஓட்டி நிலத்தை உழுது காட்டினார். இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதேபோன்று ஏலகிரி கிராமத்தில் விவசாயத்தில் இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 100 பேர்கொண்ட சிறு குறு விவசாயிகளை இணைத்து மாவட்டத்தில் 12 குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களுக்கு விவசாய களை எடுக்கும் கருவி 6 குழுக்களுக்கு மானிய விலையில் கலெக்டர் வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் ராஜசேகர், துணை இயக்குனர் பச்சையப்பன், வேளாண்மை அலுவலர் ராதா மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story