நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா தொடங்கியது


நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா தொடங்கியது
x
தினத்தந்தி 8 May 2022 6:46 PM IST (Updated: 8 May 2022 6:46 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா தொடங்கியது

நாமக்கல்:
நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா தொடங்கியது.
தேர்த்திருவிழா
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற பலப்பட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை, வைகாசி மாதங்களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா நேற்று தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி 8 லாரிகளில் மோகனூர் காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். 
இதையொட்டி பக்தர்களுக்கு ஓம்சக்தி அன்னதான நண்பர்கள் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு கோவில் வளாகத்தில் சக்தி அழைப்பு மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு சாமிக்கு பூச்சாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
மாவிளக்கு
விழாவில் வருகிற 23-ந் தேதி அதிகாலை அபிஷேக ஆராதனை, அம்மன் அலங்காரம், அலகு குத்துதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சாமி ஒவ்வொரு பகுதியாக தேரில் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 24-ந் தேதி மாவிளக்கு, பொங்கல் வைத்தல் மற்றும் வசந்தோற்சவம் நிகழ்ச்சியும், 25-ந் தேதி மஞ்சள் நீர் உற்சவமும், 26-ந் தேதி கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Next Story