அவசர கால பாதுகாப்பு ஏற்பாடு செய்வது குறித்து திண்டுக்கல்லில் மத்திய அதிவிரைவு படையினர் ஆய்வு


அவசர கால பாதுகாப்பு ஏற்பாடு செய்வது குறித்து திண்டுக்கல்லில் மத்திய அதிவிரைவு படையினர் ஆய்வு
x
தினத்தந்தி 8 May 2022 6:50 PM IST (Updated: 8 May 2022 6:50 PM IST)
t-max-icont-min-icon

அவசர கால பாதுகாப்பு ஏற்பாடு செய்வது குறித்து திண்டுக்கல்லில் மத்திய அதிவிரைவு படையினர் ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல்:
நாட்டுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவி விடாமல் தடுக்கவும், பிற நாட்டின் அத்துமீறலை முறியடிக்கவும், எல்லையில் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதேபோல் உள்நாட்டின் பாதுகாப்பை போலீசார் உறுதி செய்கின்றனர். மேலும் சாதி-மத கலவரம், பேரிடர் காலங்களில் மத்திய பாதுகாப்பு படையினர் பணிக்கு அழைக்கப்படுகின்றனர். அதுபோன்ற நேரத்தில் பாதுகாப்புக்கு வரும் மத்திய பாதுகாப்பு படையினருக்கு உள்ளூர் போலீசார் வழிகாட்டுகின்றனர்.
இதனால் அவசர கால பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தல், கலவரங்களை விரைவாக கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் சிலநேரம் தொய்வு ஏற்பட்டு விடும். இதை தவிர்க்கும் வகையில் மத்திய அதிவிரைவு படையினர் நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் ஆய்வு செய்கின்றனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அதிவிரைவு படையினர் வந்தனர். அவர்கள் பழனி உள்ளிட்ட இடங்களில் ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து  இன்று காலை திண்டுக்கல் நகருக்கு அவர்கள் வந்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையில் நகரின் பல்வேறு பகுதிகளில் அதிவிரைவு படையினர் ஆய்வு செய்தனர். அப்போது அவசர கால பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு வசதியாக வரைபடம் தயாரிக்க தகவல்களை சேகரித்து சென்றனர்.



Next Story