800 பேருக்கு கொரோனா தடுப்பூசி


800 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 8 May 2022 7:05 PM IST (Updated: 8 May 2022 7:05 PM IST)
t-max-icont-min-icon

800 பேருக்கு கொரோனா தடுப்பூசி

மடத்துக்குளம்,
கொரானா தடுப்பூசி முகாம்கள் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து நடத்தப்படுகிறது. தற்போது சென்னை உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பாதிப்பு தொடர்வதால் தற்போது இந்த தடுப்பூசி ஊசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று  மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. மடத்துக்குளம் கணியூர், கொமரலிங்கம், சங்கராமநல்லூர் பேரூராட்சிகள், துங்காவி, ஜோத்தம்பட்டி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடிகளில் இந்த முகாம்கள் நடந்தது. முதல் மற்றும் 2-ம் தடுப்பூசி போடாதவர்கள் இதில் பங்கேற்று ஊசி போட்டுக்கொண்டனர். காலை முதல் மாலை வரை நடந்த முகாமில் மடத்துக்குளம் தாலுகா பகுதியில் 800 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Next Story