கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்


கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 9 May 2022 12:00 AM IST (Updated: 8 May 2022 7:21 PM IST)
t-max-icont-min-icon

திருமணஞ்சேரி கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குத்தாலம்:-

திருமணஞ்சேரி கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமணஞ்சேரி கிராமத்தில் கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கோகிலாம்பாள் உடனாகிய உத்வாகநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு திருக்கல்யாணத்தை முன்னிட்டு கடந்த 6-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சுவாமி படி இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. 
நேற்று கல்யாணசுந்தரர் காசி யாத்திரைக்கு புறப்படுதல்,  மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதையடுத்து கோகிலாம்பாள் சமேத கல்யாணசுந்தரேஸ்வர் திருமணக்கோலத்தில் மணவறையில் எழுந்தருளினார். பின்னர் பக்தர்கள் சீர்வரிசை எடுத்துவந்தனர். தொடர்ந்து கோவில் தலைமை அர்ச்சகர் உமாபதி சிவாச்சாரியார் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். 

திரளான பக்தர்கள் தரிசனம்

திருக்கல்யாணத்தை முன்னிட்டு மூலவர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் கோவில் செயல் அலுவலர் நிர்மலா தேவி, தக்கார் இளையராஜா மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர். 
தொடர்ந்து இரவு பஞ்சமூர்த்திகள் புஷ்ப பல்லக்கில் வீதி உலா புறப்பாடு நடந்தது. விழாவில் வருகிற 12-ந் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது. 

Next Story