பந்தலூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா


பந்தலூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
x
தினத்தந்தி 8 May 2022 7:28 PM IST (Updated: 8 May 2022 7:28 PM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

பந்தலூர்

பந்தலூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

தேர்த்திருவிழா

பந்தலூர் அருகே பிதிர்காடு ஸ்ரீசக்திமுனீஸ்வரர், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 14-ம் ஆண்டு தேர்த்திருவிழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. முன்னதாக சக்தி முனீஸ்வரர், முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கடந்த 6-ந்தேதி காலை 5 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து மகாகணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து கொடிஏற்று விழா நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் பஞ்ச தீபம் நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு 8 மணிக்கு அம்மன் குடி அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நேர்த்திக்கடன்

அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து காலை 11 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. மதியம் 12 மணிக்கு பால்குடம் ஊர்வலமும், பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இந்த ஊர்வலம் முக்கட்டியிலிருந்து புறப்பட்டு பிதிர்காடுபஜார் வழியாக கோவிலை வந்தடைந்தது. அம்மன் திருத்தேர் ஊர்வலம் நடைபெற்றது தேர் மேளதாளம் வானவேடிக்கையுடன் முக்கட்டியிலிருந்து புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. அதன்பின்னர் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். 

Next Story