பந்தலூர் அருகே வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்


பந்தலூர் அருகே வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 8 May 2022 7:29 PM IST (Updated: 8 May 2022 7:29 PM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்

பந்தலூர்

பந்தலூர் அருகே பிதிர்காடு சமுதாயகூடத்தில் வனத்துறை சார்பில் மனித-விலங்கு மோதல்கள் குறித்தும் வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு உதவி வன பாதுகாவலர் கிருபாகரன் தலைமை தாங்கினார். தாசில்தார் நடேஷன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, தேவர்சோலை மின்வாரியதுறை உதவிபொறியாளர் ஹரிகிருஸ்ணன், வருவாய் ஆய்வாளர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 கூட்டத்தில் மின்கம்பிகள் மற்றும் வீடுகள் அருகே அபாயகரமான மரங்களை உயர்அதிகாரின் அனுமதிபெற்று அகற்ற வேண்டும். யானை வழிதடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். மனித -விலங்கு மோதல்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்கு நோய்பரவாமல் தடுக்க எல்லை ஓரங்களில் உள்ள கிராமங்களில் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

 இதில் வனவர்கள் பரமேஸ்வரன், ஜார்ஜ், பிரவீன்ஷன், கிராம நிர்வாக அலுவலர்கள் கர்ணன் அசோக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story