தையல் கலைஞர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
கடை வைத்திருக்கும் தையல் கலைஞர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர்:
கடை வைத்திருக்கும் தையல் கலைஞர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரவை கூட்டம்
திருவாரூரில் சி.ஐ.டி.யூ. தையல் தொழிலாளர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கவுரவ தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சுந்தரம், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல், தையல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாலதி, மாவட்ட தலைவர் சரவணன், மாவட்ட பொருளாளர் கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
இலவச தையல் எந்திரம்
கடைகள் வைத்திருக்கும் தையல் கலைஞர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். வீடு சார்ந்த தையல் கலைஞர்களுக்கு இலவச தையல் எந்திரம் வழங்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தம் செய்வதை கைவிட வேண்டும். தையல் தொழிலாளர்களை பாதிக்க கூடிய பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்திடவும், பாரபட்சமின்றி அனைவருக்கும் துணிகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story