தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9176108888 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணுக்கு வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பஸ் நிறுத்தத்தில் தேங்கும் மழைநீர்
திருவண்ணாமலை வேங்கிக்காலில் செயல்படும் மின்வாரிய அலுவலகம் எதிரில் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு அமருவதற்கு இருக்கைகள் உள்ளன. ஓரிரு நாட்களுக்கு முன்பு பெய்த மழையால், பஸ் நிறுத்தத்தில் மழைநீர் தேங்கியும், பாசி படர்ந்தும் உள்ளது. பஸ்சுக்காக காத்திருப்போர் அமர முடியாமல் சிரமப்படுகின்றனர். தேங்கிய நீரில் கொசுக்களும் உற்பத்தியாகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தை தூய்ைமப்படுத்துவார்களா?
-பாக்கியா, திருவண்ணாமலை.
சாலை பள்ளத்தை சரி செய்ய வேண்டும்
காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்திலிருந்து திருவலம் செல்லும் சாலையில் சிறிது தொலைவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவ்வழியாக சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி சாலை பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஷ்ணுதாசன், வேலூர்.
கழிவுநீர் கால்வாயை தூர்வார ேவண்டும்
ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சி வார்டு எண்:2-ல் தொகுப்பு வீடுகள் உள்ள பகுதியில் கழிவுநீர் கால்வாயில் பாலித்தீ்ன் பொருட்கள், குடிநீர் பாட்டில்கள் கிடக்கின்றன. புல், செடிகள் வளர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் சரியாக ஓடாததால் தேங்கி நிற்கிறது. பேரூராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.
-ரா.இளவரசன், விளாப்பாக்கம்.
சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா தென்னாங்கூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அந்தச் சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் கிடப்பில் ேபாட்டு விட்டனர். அதை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அ.ராமமூர்த்தி, ெதன்னாங்கூர்.
குழாய் உடைந்து வீணாக செல்லும் குடிநீர்
வேலூர் பழைய பைபாஸ் சாலையில் ஆடு தொட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சென்றது. அதைச் சரி செய்ய கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு சாலையில் பள்ளம் தோண்டி சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் தொடர்ந்து தண்ணீர் வெளியேறி சாலையில் வீணாக ஓடுகிறது. தோண்டப்பட்ட பள்ளத்தையும் மூடவில்லை. அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் மிகவும் சிரமத்துடன் அந்தப் பகுதியை கடந்து செல்கின்றது. நடந்து செல்ேவாரும் அவதிப்படுகின்றனர். தண்ணீர் வெளியேறி சாலையோரம் குளம்ேபால் ேதங்கி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய ேவண்டும்.
-ஆல்பர்ட், வேலூர்
பேட்டரி வாகனங்கள் பழுது
ஆரணி நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டன. அதில் 20-க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் பழுதடைந்துள்ளன. அவை அனைத்தும் ஆரணி நகராட்சி அலுவலக பகுதியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டி அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட இடையூறு காரணமாக குப்பைகளை பொதுமக்களிடம் சேகரிக்க துப்புரவுப் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். எனவே பேட்டரி வாகனங்களை பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-மோகன்ராஜ், வேலூர்.
வேளாண் விரிவாக்க மையம் தொடங்க வேண்டும்
திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி கிராமத்தைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. அங்குள்ள அனைவரும் விவசாயம் செய்து வருகின்றனர். விதைகள் மற்றும் உரம் வாங்க 20 கிலோ மீட்டர் தூரம் செல்ல ேவண்டி உள்ளது. எனவே கடலாடியில் வேளாண் விரிவாக்க மையம் தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், கடலாடி.
Related Tags :
Next Story