தூத்துக்குடி மாவட்டத்தில் 52 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


தூத்துக்குடி மாவட்டத்தில்  52 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 8 May 2022 8:50 PM IST (Updated: 8 May 2022 8:50 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 52 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடந்த தடுப்பூசி முகாமில் 52 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2 வாரமாக தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு உள்ளது. நேற்று தூத்துக்குடி சுகாதார மாவட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி மாநகரில் 200 இடங்களிலும், புறநகர் பகுதியில் 436 இடங்களிலும், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் 365 இடங்களிலும் சிறப்பு முகாம் நடந்தது. இது தவிர 416 வேன்கள் மூலம் சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தினர். இதனால் மாவட்டம் முழுவதும் மொத்தம் 1417 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்பட்டது.
52 ஆயிரம் பேர்
இந்த முகாமில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி உள்ளிட்டவை செலுத்தப்பட்டன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 52 ஆயிரத்து 165 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த வாரம் நடந்த முகாமில் ஒரே நாளில் 75 ஆயிரத்து 770 பேருக்கு தடுப்பூசி செலுத்தி மாநிலத்தில் 3-வது அதிக தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக தூத்துக்குடி விளங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story