முதல்-மந்திரி பதவிக்கு பேரம் பேசியதாக கூறிய யத்னால் எம்.எல்.ஏ. மீது என்ன நடவடிக்கை-காங்கிரஸ் கேள்வி


முதல்-மந்திரி பதவிக்கு பேரம் பேசியதாக கூறிய யத்னால் எம்.எல்.ஏ. மீது என்ன நடவடிக்கை-காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 8 May 2022 9:12 PM IST (Updated: 8 May 2022 9:12 PM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி பதவிக்கு பேரம் பேசியதாக கூறிய பசவனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போவதாக பா.ஜனதாவுக்கு, காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி யு.டி.காதர் கேள்வி எழுப்பியுள்ளார்

மங்களூரு: முதல்-மந்திரி பதவிக்கு பேரம் பேசியதாக கூறிய பசவனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போவதாக பா.ஜனதாவுக்கு, காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி யு.டி.காதர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
யு.டி.காதர் பேட்டி

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரியும், மங்களூரு தொகுதி எம்.எல்.ஏ.வுமான யு.டி.காதர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதல்-மந்திரி பதவிக்கு ரூ.2,500 கோடி பேரம் பேசியதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. பசவனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். இதன் மூலம் பா.ஜனதா, முதல்-மந்திரி பதவிக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பிரியங்க் கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு பா.ஜனதா அரசு நோட்டீசு அனுப்பியது. அந்த வகையில் தற்போது முதல்-மந்திரி பதவிக்கு பேரம் குறித்து பேசிய பசவனகவுடா பட்டீல் யத்னால் மீது பா.ஜனதா என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது. 
 
நடவடிக்கை எடுக்க வேண்டும்

கர்நாடகத்தில் முஸ்லிம் சமுதாயம் அமைதியாக இருக்கிறது. ஆனால் அவர்களின் அமைதியை கெடுக்கும் முயற்சியில் சில விஷமிகள் ஈடுபடுகிறார்கள். இதற்கு மாநில அரசும், போலீஸ் துறையும் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 
குறிப்பாக சமூக வலைத்தளங்களில் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து பதிவிடுபவர்கள் மீது நடவடிக்ைக எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story