கர்நாடக முதல்-மந்திரியை மாற்றும் எண்ணம் பா.ஜனதா மேலிடத்திற்கு இல்லை-மந்திரி எம்.டி.பி. நாகராஜ்


கர்நாடக முதல்-மந்திரியை மாற்றும் எண்ணம் பா.ஜனதா மேலிடத்திற்கு இல்லை-மந்திரி எம்.டி.பி. நாகராஜ்
x
தினத்தந்தி 8 May 2022 9:29 PM IST (Updated: 8 May 2022 9:29 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக முதல்-மந்திரியை மாற்றும் எண்ணம் பா.ஜனதா மேலிடத்திற்கு இல்லை என்று மந்திரி எம்.டி.பி. நாகராஜ் தெரிவித்துள்ளார்

சிக்பள்ளாப்பூர்: கர்நாடக முதல்-மந்திரியை மாற்றும் எண்ணம் பா.ஜனதா மேலிடத்திற்கு இல்லை என்று மந்திரி எம்.டி.பி. நாகராஜ் தெரிவித்துள்ளார்.

முதல்-மந்திரி மாற்றம் இல்லை

கர்நாடக நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி எம்.டி.பி.நாகராஜ் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை மாற்ற முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது உண்மைக்கு புறம்பானது. எக்காரணத்தை கொண்டும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றப்படமாட்டார். அந்த எண்ணமும் பா.ஜனதா மேலிடத்திற்கு இல்லை. ஆனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதா? அல்லது மாற்றி அமைப்பதா என்பதில் கட்சியின் மேலிடம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
 
துளியும் உண்மை இல்லை

இந்த விவகாரத்தில் எத்தகைய முடிவு எடுப்பது என்பது குறித்து பா.ஜனதா மேலிடம் ஓரிரு நாளில் அறிவிக்கும். மந்திரிசபையை மாற்றி அமைப்பதாக இருந்தால் மந்திரி பதவிகளுக்கான பட்டியல் விரைவில் வெளியாகும். அதன்பின்னர் புதிய மந்திரிகள் பதவி ஏற்பார்கள்..

மந்திரி சபையில் இருந்து என்னை நீக்கினாலும் அதை பற்றி எனக்கு வருத்தம் இல்லை. மந்திரி பதவியை விட வேறு பொறுப்பு கொடுத்தாலும் அதை திறம்பட செய்து காட்டுவேன். 2023-ம் ஆண்டு கர்நாடக சட்டசபைக்கான பொது தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் சந்திப்போம். இதன் மூலம் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும். முதல்-மந்திரி பதவிக்கு ரூ.2,500 கோடி இடைத்தகரகர்கள் கேட்டதாக பசவனகவுடா பட்டீல் யத்னால் பேசியது எனது கவனத்திற்கு வரவில்லை. அவர் எதற்காக அப்படி பேசினார் என்று அறிந்து கொண்டு பதில் அளிக்கிறேன். ஆனால் பசவனகவுடா பட்டீல் யத்னால் கூறியதில் துளியும் உண்மை இல்லை என்றே நான் கருதுகிறேன். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story