ஒர்க்ஷாப் உரிமையாளர் தற்கொலை
கம்பத்தில் ஒர்க்ஷாப் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கம்பம்:
கம்பம் மாலையம்மாள்புரத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 41). வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார். இவருடைய தந்தை ராஜேந்திரன் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இதையடுத்து முதலாம் ஆண்டு நினைவுநாளையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி நடந்தது. அதற்கு தனது தாய் மற்றும் சகோதரர்கள் செல்வகுமாரை அழைக்கவில்லை என தெரிகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்வக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story