தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்


தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 May 2022 9:53 PM IST (Updated: 8 May 2022 9:53 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

தியாகதுருகம், 
தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதையொட்டி நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி, தடுப்பூசி முகாமை     தொடங்கி      வைத்தார்.  மாநில சுகாதாரத்துறை ெசயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மாணவர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி     செலுத்தி   கொண்டனர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், தியாகதுருகம் ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன், துணைத்தலைவர் நெடுஞ்செழியன், தியாகதுருகம் பேரூராட்சி மன்ற தலைவர் வீராச்சாமி, துணைத் தலைவர் சங்கர், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மலையரசன், மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன், ஒன்றிய துணைச் செயலாளர் அண்ணாதுரை, வட்டார மருத்துவ அலுவலர் ரவீன் மற்றும் தியாகதுருகம் ஒன்றிய, நகர தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story