தேனூா் ஜல்லிக்கட்டில் 785 காளைகள் சீறிப்பாய்ந்தன
தேனூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 785 காளைகள் சீறிப்பாய்ந்தன.
பொன்னமராவதி:
ஜல்லிக்கட்டு
பொன்னமராவதி அருகே தேனூர் கிராமத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி தேனூர் கிராமத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது.
இதில் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டி அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 785 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
6 பேர் காயம்
இதில் காளைகள் முட்டியதில் 6 பேர் லேசான காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவகுழுவினரால் சிகிச்ைச அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, வெள்ளி, தங்க நாணயங்கள், குக்கர், கட்டில், நாற்காலி மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டை அமைச்சர் எஸ்.ரகுபதி, தேனூர் ஊராட்சி மன்ற தலைவர் கிரிதரன், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பொன்னமராவதி வட்டாட்சியர் ஜெயபாரதி மற்றும் புதுக்கோட்டை, பொன்னமராவதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் பொன்னமராவதி போலீசார் செய்தனர்.
Related Tags :
Next Story