உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமான போலீஸ் அதிகாரிகள் ஹிரேன் மன்சுக்கை கொலை செய்தனர்- கிரித் சோமையா குற்றச்சாட்டு
உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமான போலீஸ் அதிகாரிகள், ஹிரேன் மன்சுக்கை கொலை செய்ததாக கிரித் சோமையா குற்றம்சாட்டி உள்ளார்.
மும்பை,
உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமான போலீஸ் அதிகாரிகள், ஹிரேன் மன்சுக்கை கொலை செய்ததாக கிரித் சோமையா குற்றம்சாட்டி உள்ளார்.
ஹிரேன் மன்சுக் கொலை
மும்பையில் உள்ள தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகில் கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ந் தேதி வெடி குண்டு கார் நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும் காரின் உரிமையாளர் தானேயை சேர்ந்த ஹிரேன் மன்சுக்கும் கொலை செய்யப்பட்டார்.
வெடி குண்டு கார், ஹிரேன் மன்சுக் கொலையில் முன்னாள் போலீஸ் அதிகாரி சச்சின் வாசே, முன்னாள் எண்கவுன்டர் ஷபெலிஸ்ட் பிரதீப்சர்மா உள்ளிட்ட பலர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரித் சோமையா குற்றச்சாட்டு
இந்தநிலையில் பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா நேற்று கொலை செய்யப்பட்ட ஹிரேன் மன்சுக்கின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். பின்னர் அவர் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமான சில போலீஸ் அதிகாரிகள் தான் ஹிரேன் மன்சுக்கை கொலை செய்ததாக கூறினார். மேலும் அவர் இதுதொடர்பாக வழக்கை விசாரித்து வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகளை சந்தித்துபேச உள்ளதாகவும் தெரிவித்தார்.
கிரித் சோமையாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து முதல்-மந்திாி அலுவலகம் தரப்பில் யாரும் கருத்து கூறவில்லை. முன்னதாக ஹிரேன் மன்சுக்கை கொலை செய்ய சச்சின் வாசே, பிரதீப் சர்மாவிடம் ரூ.45 லட்சம் கொடுத்ததாக என்.ஐ.ஏ. மும்பை ஐகோர்ட்டில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story