200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி


200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 8 May 2022 10:00 PM IST (Updated: 8 May 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

போடி நகராட்சி நிர்வாகம் சார்பில் 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

போடி: 

போடி நகராட்சி மற்றும் கிரீன் லைப் பவுண்டேஷன் சார்பில் தமிழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி போடியில் நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நகராட்சி ஆணையாளர் சகிலா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சீனிவாசன் நகர், பூங்கா நகர், மயான கரை ரோடு ஆகிய இடங்களில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. 

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்து நகராட்சி தலைவர் விளக்கி பேசினார். விழாவில் நகராட்சி பொறியாளர் செல்வராணி, கவுன்சிலர்கள் சங்கர், முருகேசன், ராஜா, கஸ்தூரி, வெங்கடேசன், ராஜசேகர், சரஸ்வதி மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், பாலமுருகன், தர்மர், நகராட்சி வரைவாளர் கோபிநாத், கிரீன் லைப் பவுண்டேஷன் தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story