கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 9 May 2022 12:15 AM IST (Updated: 8 May 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

வள்ளாலகரம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

மயிலாடுதுறை:-

மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவி ஜெயசுதா ராபர்ட் தலைமை தாங்கினார். இதில் வட்டார சுகாதார மைய செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Next Story