கர்நாடகத்தில் 1,000 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும் - மந்திரி சுனில்குமார் தகவல்
அடுத்த மாதத்திற்குள் கர்நாடகத்தில் 1,000 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையம் அமைக்கப்படும் என்று மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் தெரிவித்துள்ளார்.
மைசூரு:
மந்திரி சுனில்குமார்
மைசூரு சாமுண்டீஸ்வரி மின்வாரியம் மற்றும் கர்நாடக மின்வாரியம் சார்பில் எலெக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜிங் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நடந்தது.
இதில் மாநில மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் கலந்து கொண்டு சார்ஜிங் மையத்தை திறந்து வைத்தார். இதைதொடர்ந்து அவர் பேசியதாவது:- கர்நாடகத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எலெக்ட்ரிக் சார்ஜிங் மையங்கள்
எலெக்ட்ரிக் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அதற்கு சார்ஜிங் செய்வதில் சிரமப்படுகிறார்கள். அதனால் மாநிலம் முழுவதும் 1,000 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம்(ஜூன்) மாதத்திற்குள் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும்.
இதில் சார்ஜ் செய்ய குறிப்பிட்ட கட்டணம் விதிக்கப்படும். இதனால் எலெக்ட்ரிக் வாகன ஓட்டிகள் பெரும் பயனடைவார்கள். மேலும் பெட்ரோல்-டீசல் உபயோகம் குறைந்து காற்று மாசு ஏற்படுவதை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story