ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்
மயிலாடுதுறை மகாதானபுரம் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை அருகே மகாதானபுரம் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை செல்வி தலைமை தாங்கினார். இதில் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர் சரத்சந்திரன் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மை குழுவின் செயல்முறைகள் பற்றி பேசினார். மேலும் ஆசிரியர் ஸ்டாலின் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து பேசினார். தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு தலைவியாக நிர்மலாதேவி, துணை தலைவியாக சீதா, இல்லம் தேடி கல்வி தன்னார்வலராக வனிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் இடைநிலை ஆசிரியை அனிதா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story