கடலூர் மாவட்டத்தில் 3,746 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்


கடலூர் மாவட்டத்தில் 3,746 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 8 May 2022 10:06 PM IST (Updated: 8 May 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் 3,746 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் 29-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதற்காக 3,746 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து இந்த முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்தது. இதில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி, 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கு கோர்போ வேக்ஸ் தடுப்பூசியும், 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி என சுமார் 75 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டது. அதன்படி இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேற்று விடுமுறை என்பதால் முகாம்களில் உள்ள பணியாளர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் 3 மணி நேரம் வீதம் ஒவ்வொரு குழுவும் குறைந்தபட்சம் 4 இடங்களில் வீடு வீடாகச்சென்று அவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்தனர்.

பரவல்

அதன்படி கடலூர் பாதிரிக்குப்பம் ஊராட்சியில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார். அப்போது, முகாமில் எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. போதுமான தடுப்பூசி இருப்பு உள்ளதா என்றும் அங்கிருந்து அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து கொரோனா 4- வது அலை டெல்லி, கேரளா ஆகிய மாநிலங்களில் பரவி வருவதால், நாம் அனைவரும் கொரோனா பெருந் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.
ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மீரா மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story