விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் பேரிடர் கால மீட்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி கலெக்டர் போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் பேரிடர் கால மீட்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி கலெக்டர் போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
விக்கிரவாண்டி
விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி ஆஸ்பத்திரியில் தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் தற்காப்பு நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ராபின் காஸ்ட்ரோ தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து போன்ற பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், மாடி கட்டிடங்களில் சிக்கியவர்களைமீட்பது எப்படி, தீ விபத்து தடுப்பு, விபத்து கால மீட்பு நடவடிக்கைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
இதில் மாவட்ட கலெக்டர் மோகன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மருத்துவக் கல்லூரி முதல்வர் குந்தவி தேவி ஆகியோர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களை பாராட்டி பேசினார்கள். நிகழ்ச்சியில், மருத்துவ கண்காணிப்பாளர் புகழேந்தி, துணை முதல்வர் சங்கீதா, நிலைய மருத்துவ அதிகாரி சாந்தி, தாசில்தார் இளவரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணன், குலோத்துங்கன், செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி பாண்டி, நிர்வாக அலுவலர்கள் சிங்காரம் ஆனந்த ஜோதி மற்றும் அனைத்து துறை தலைவர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story