கீழ் மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவில் தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர்


கீழ் மாம்பட்டு  அம்மச்சார் அம்மன் கோவில் தேர் திருவிழா  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர்
x
தினத்தந்தி 8 May 2022 10:10 PM IST (Updated: 8 May 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

கீழ் மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவில் தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர்

செஞ்சி

செஞ்சி தாலுகா கீழ்மாம்பட்டு கிராமத்தில் உள்ள அம்மச்சார் அம்மன்,  செல்வவிநாயகர், சீனிவாச பெருமாள் ஆகிய கோவிலின் 22-ம் ஆண்டு பிரம்மோற்சவம் மற்றும் 13-ம் ஆண்டு ரதோற்சவ விழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-வது நாளான நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பூஜையும் காலை 7 மணிக்கு தேர் சக்கர பூஜையும் அதைத்தொடர்ந்து அம்மன் தேர் பிரவேசமும் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் நான்கு மாட வீதி வழியாக அசைந்தாடியபடி சென்று நிலையை அடைந்தது. 
விழாவில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் விஷ்ணுபிரசாத், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், பத்மினி தேவி மூர்த்தி பஸ் உரிமையாளர் கிருஷ்ணதாஸ் ரெட்டியார், ஊராட்சி தலைவர் முருகன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி மற்றும் உபயதாரர்கள், கிராம மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

Next Story