தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படியை அறிவிக்க வேண்டும் அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படியை அறிவிக்க வேண்டும் அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
விழுப்புரம்
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் விழுப்புரம் மண்டல செயற்குழு கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில துணைத்தலைவர் கவிஞர் சிங்காரம் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட தலைவர் அய்யனார் முன்னிலை வகித்தார். செயலாளர் டேவிட்குணசீலன் வரவேற்றார். மாநில தலைவர் குமார், மாநில பொதுச்செயலாளர் பொன்னிவளவன், பிரசார செயலாளர் சத்தியமூர்த்தி, மாநில துணைத்தலைவர் நல்லத்தம்பி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் அருணகிரி, முன்னாள் மாநில பிரசார செயலாளர் சிவகுரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இக்கூட்டத்தில், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட 3 சதவீத அகவிலைப்படியை போன்று தமிழக அரசு ஊழியர்களுக்கும் அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் குமரவேல் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story