கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை தேர்வர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை தேர்வர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி முதல் ஏழை, எளிய போட்டித்தேர்வர்களின் நலன் கருதி கல்வி தொலைக்காட்சி மூலம் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கல்வி தொலைக்காட்சி மூலமாக ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்கள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தினந்தோறும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மறுஒளிபரப்பு மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. குறிப்பாக ஏர்டெல் டி.டி.எச்.- 821, சன் டி.டி.எச். 33, டாடா ஸ்கை டி.டி.எச்.-1554, வீடியோகான் டி.2.எச். 597 மற்றும் அரசு கேபிள் தொலைக்காட்சிகளான டேக் டி.வி.-200, டி.சி.சி.எல்-200, வி.கே.டி. ஜிட்டல்-55, அக்சயா-17, எஸ்.சி.வி-98, ஜி.டி.பி.எல்-99 போன்ற குறிப்பிட்ட அலைவரிசைகளில் மேற்கண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்படும் பயற்சி வகுப்புகளை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story