கல்வராயன்மலை சுற்றுலா தலத்தில் குப்பைகளை அகற்றிய இளைஞர்கள்


கல்வராயன்மலை சுற்றுலா தலத்தில் குப்பைகளை அகற்றிய இளைஞர்கள்
x
தினத்தந்தி 8 May 2022 10:21 PM IST (Updated: 8 May 2022 10:21 PM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலை சுற்றுலா தலத்தில் கிடந்த குப்பைகளை இளைஞர்கள் அகற்றினர்.

கச்சிராயப்பாளையம், 
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் கல்வராயன்மலை அமைந்துள்ளது. ஏழைகளின் சுற்றுலா தலமான இங்கு பெரியார், மேகம், கவியம் உள்ளிட்ட 9 நீர்வீழ்ச்சிகளும், கரியாலூரில் படகு குழாமும் உள்ளது. இந்த சுற்றுலா தலத்துக்கு வாரவிடுமுறை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கள்ளக்குறிச்சி, சேலம், சங்கராபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி, சென்னை மற்றும் புதுச்சேரி பகுதி மக்கள் குடும்பத்துடன் வாகனங்களில் வந்து பெரியார் நீர்வீழ்ச்சியில் குளித்தும், படகு குழாமில் ஆனந்தமாக படகு சவாரி செய்தும் மகிழ்வார்கள். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள், காலி குடிநீர் பாட்டில்களை அதேபகுதிகளில் போட்டுச் செல்கிறார்கள். இதனால் அப்பகுதிகளில் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது. இதையறிந்த கல்வராயன்மலை, கச்சிராயப்பாளையம் பகுதி இளைஞர்கள் வனச்சரகர் கோவிந்தராஜ் தலைமையிலும், வனக்காப்பாளர் செல்வராஜ், இயற்கை ஆர்வலர் டாக்டர் சிந்துவள்ளி ஆகியோர் மேற்பார்வையிலும் பெரியார் நீர்வீழ்ச்சி, கரியாலூர் படகு குழாம், கோமுகி அணை வியூ பாயிண்ட் போன்ற பகுதிகளில் கிடந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அப்புறப்படுத்தினர்.

Next Story