மரத்தை வெட்டியவர் கைது
மரத்தை வெட்டியவர் கைது செய்யப்பட்டார்
ராமநாதபுரம்,
திருஉத்தரகோசமங்கை அருகே உள்ளது கடம்போடை கிராமம். இந்த ஊரைச்சேர்ந்த கருப்பையா மகன் கருணாநிதி (வயது56). இவரது கொல்லையில் புளியமரம் வளர்ந்துள்ளது. இந்த புளியமரம் கிளை வளர்ந்து அருகில் உள்ள காயாம்பு மகன் அழகுத் திருமேனி (39) என்பவரின் வீட்டிற்குள் சென்றுள்ளது. இதனை வெட்டும்படி கூறிய நிலையில் கருணாநிதி தாமதம் செய்தாராம். இதனால் ஆத்திரமடைந்த அழகுத்திருமேனி கொல்லைக்குள் அத்துமீறி நுழைந்து புளிய மரத்தை வெட்டி மொட்டையாக்கி விட்டாராம். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கருணாநிதி திருஉத்தரகோசமங்கை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகுத்திருமேனியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story