புனித சூசையப்பர் ஆலய ஆண்டு திருவிழா
கீழ்வேளூர் புனித சூசையப்பர் ஆலய ஆண்டு திருவிழா நடைபெற்றது.
சிக்கல்:
கீழ்வேளூர் மெயின் ரோட்டில் புனித சூசையப்பர் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆலயத்தில் தினமும் திருப்பலிகள் மற்றும் கூட்டு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கப்பட்ட சூசையப்பர் சொரூபம் வைக்கப்பட்ட 3 சப்பரங்கள் நான்கு வீதிகள் வழியாக பவனியாக வந்தது. இதில் பேராலய பங்குத்தந்தை ஜான்பீட்டர், கீழ்வேளூர், கோகூர், நீலப்பாடி, குருமனாங்குடி, அகரகடம்பனூர், கடம்பங்குடி, வடக்காலத்தூர் பகுதிகளை சேர்ந்த பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story