தாறுமாறாக ஓடிய லாரி வீட்டுக்குள் புகுந்தது


தாறுமாறாக ஓடிய லாரி வீட்டுக்குள் புகுந்தது
x
தினத்தந்தி 8 May 2022 10:37 PM IST (Updated: 8 May 2022 10:37 PM IST)
t-max-icont-min-icon

மண்டபத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி வீட்டுக்குள் புகுந்தது.

பனைக்குளம்,  
மண்டபத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி வீட்டுக்குள் புகுந்தது.
லாரி
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 32). ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் நோக்கி லாரியை ஓட்டி வந்துள்ளார். நேற்று அதிகாலையில் மண்டபம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதிய லாரி வீட்டுக்குள் புகுந்து நின்றது. 
பயங்கர சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்து பார்த்தபோது லாரி வீட்டுக்குள் புகுந்து நின்று இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்த வர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
விசாரணை
அதன்பேரில் மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி வீட்டின் சுவரில் மோதி நின்றதால் வீட்டின் உள்ளே இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

Next Story